2 குழந்தைகளின் தாய் மாயம்

0 310
Stalin trichy visit

திருச்சி இப்ராகிம் பார்க் பூங்கா அருகில் உள்ள பெரிய செட்டி தெருவை சேர்ந்தவர் பாலன் (62). இவரது மகள் சரண்யா(38) என்பவருக்கும், பத்ரிநாராயணன் என்பவருக்கும் கடந்த 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலன் திருச்சி தில்லைநகர் பகுதியில் பழைய வாகனம் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு துணையாக பத்ரி நாராயணன் அதே கடையில் அவரது தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பத்ரிநாராயணனின் மனைவி சரண்யா என்பவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே இருந்து மருந்து மாத்திரை எடுத்து வருகிறார். இதற்கிடையே கடந்த 5ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சரண்யாவின் தந்தை பாலன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.