கிளிக்கூடு சாலை விபத்தில் 2 பேர் பலி – போலீசார் விசாரணை

0 452
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலை கிளிக்கூடு அருகே பைக் மீது எதிரே வந்த பைக் மோதியதில் தடுமாறிக் கீழே விழுந்தனர் இதில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறியதில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள மேல வெட்டி நடு தெருவைச் 45 வயதான வீரமணி மற்றும் உத்தமர்சீலி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 56 வயதான குமார் ஆகியோர் கல்லணையிலிருந்து உத்தமர்சீலி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதேபோல உத்தமர்சீலி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 42 வயதான வீரமலை பைக்கில் கல்லணை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி கல்லணை சாலை கிளிக்கூடு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியது் இதில் 3 பேரும் சாலையில் தடுமாறி விழுந்தனர். அப்போது திருச்சி நோக்கி வந்த லாரி வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீதும் மோதியது இதில் வீரமணி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வீரமணி உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை குளிப்பட்டி எஸ். புதுரைச் சேர்ந்த 40 வயதான தேவராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.