43-வது வார்டில் சீரமைப்பு பணிகள் – மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆய்வு

0 327
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பர்மா காலனி நேதாஜி தெருவில் நீண்ட நாட்களாக சாலையின் மீது தனிநபர் கொட்டி வைத்திருந்த ஓடுகளையும்,செங்கல் ஜல்லிகளையும் அகற்றும் பணி,

போஸ் தெரு, காமராஜர் தெரு, ஆகிய இடங்களில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி அகற்றும் பணி, திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டாலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாம்பு, பூச்சிகளுக்கு அஞ்சிய காரணத்தால் அந்த தனிநபர் யார் என்று தெரியவில்லை என்பதால் மாநகராட்சி ஊழியர்களை வைத்து சுத்தம் செயாது மாநகராட்சி ஃபோர்டை வைக்கும் பணி,

முருகன் கோயில் தெருவில் சாலைப் போடும் பணி, காந்திஜி தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட சேதத்தால் நீண்ட நாட்களாக அடைத்து கொண்டிருந்த சாக்கடையை தூர்வாரும் பணி,

திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவில் சாக்கடையை தூர்வாரும் பணி

ஆகியவற்றை ஆய்வு செய்தார் உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.