பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் நீரிழிவு நோய்க்கான தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 469
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மற்றும் பிரபு நீரிழிவு சிறப்பு மையம் இணைந்து “நீரிழிவு நோய்க்கான தடுப்பு நடவடிக்கை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி தங்கேஸ்வரி நகர், பொன்மலையில் நடைப்பெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் திருமதி.புயிலா மாணிக்கம் மற்றும் திரு.தேவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிரபு நீரிழிவு சிறப்பு மையம் திருமதி.M.S.பெய்லி (நீரிழிவு ஆலோசகர்) நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் வந்தால் உடல் ஆரோக்கியம் பேனுவது பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பிரபு நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் கே.எஸ்.வேல்‌ முருகன் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் முதுகலை முதலாமாண்டு மாணவி டி.ஆரோக்கிய மனிஷா அவர்கள் இணைந்து சிறப்புரை நடத்தினர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி முதுகலை முதலாமாண்டு மாணவி பி.அருணா நன்றியுரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆகிய பி.அருணா, அ.நிஷா, தெ.சிலம்பரசன் மற்றும் இந் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.