குடிபோதையில் தகராறு. பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் படுகாயம்

0 705
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை அய்யன் வாய்க்கால் கரையில் மதுபோதையில் ஏற்ப்பட் தகராறில் பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

மணச்சநல்லூர் அருகே கரிய மாணிக்கம் குடித் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மகன் 27 வயதான சுந்தர்ராஜ், சீனிவாசன் மகன் 30 வயதான அசோக் என்கின்ற வைர பெருமாள், முருகேசன் மகன் 30 வயதான ராஜ்குமார் மூவரும் ஒன்றாக அமர்த்து இன்று மாலை அய்யன் வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதில் மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் பீர் பாட்டிலை உடைத்து சுந்தரராஜ் கழுத்தில் வைர பெருமாள் மற்றும் ராஜ்குமார் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் ராஜ்குமார் வைரபெருமாளை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.