மாநில தடகள சாம்பியன்ஷிப் – திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள் சாதனை
96வது தமிழ்நாடு மாநில தடகள சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். முதுகலை யோகாவை சேர்ந்த மாணவிகள் ஸ்வாதி 4× 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் பரிசையும், தேஜஸ்வினி 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தையும், ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளார். இளங்கலை உடற்கல்வி துறை மாணவி ஷோபனா தேவி நீளம் தாண்டுதலில் 3-ம் இடத்தை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் செயலர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் சுந்தரராமன் மற்றும் உடற்கல்வி துறை தலைவரும் தேசிய கல்லூரி துணை முதல்வருமான பிரசன்ன பாலாஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.