பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
திருச்சியில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்ததால் ஏற்பட்ட இழப்பினை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையார்களுக்கு ஈடு செய்திட வலியுறுத்தி எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல். டீசல் கொள்முதல் செய்வதை என திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கிடங்கு முன்பு உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் செயலாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
கடந்த 21 தேதி மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான கூடுதல் கலால் வரியினை தலா ரூ.8/- மற்றும் ரூ.6/- லிட்டருக்கு குறைத்து அறிவிப்பு செய்ததின் மூலம் இந்திய நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பின் காரணமாக சில்லறை விற்பனை விலையினை உடனடியாக மாற்றியமைத்ததற்காக தனது கடுமையான ஆட்சேபணையினையும் தெரிவிக்கிறோம்
சில்லறை விற்பனையாளர்கள் ஆகிய எங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டிலிருந்து இன்றுவரை விளிம்புத் தொகையினை அதிகரித்து வழங்கவில்லை. ஏற்கனவே உள்ள விளிம்புத் தொகையில் கிடைத்திடும் ஆதாயத்தின் மூலமே விற்பனை நிலையங்களின் அனைத்து நிர்வாக செலவினங்களும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஒரு லிட்டர் சுமார் 60/- ரூபாய் இருந்த பெட்ரோல் தற்போது சுமார் 104/- ரூபாய் என்ற அளவில் உள்ளது. டீசல் ஒரு லிட்டர் 52/-ரூபாயிலிருந்து 96/- ரூபாய் ஆகி
உள்ளது.
இதனால் எங்களது நடைமுறை மூலதனம் மிகவும் உயர்ந்து பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும். விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்ற விளிம்புத் தொகையான பெட்ரோலுக்கு 3 ரூபாய் 6 காசுகளும், டீசலுக்கு 1 ரூபாய் 88 காசுகளும் வழங்குகிறது
அந்த விளிம்புத் தொகையில் 90 சதவீதம் விற்பனை நிலையங்களின் நிர்வாக செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது.
மேற்படி விளிம்புத் தொகையின் கட்டமைப்பு 2010ம் ஆண்டில் உள்ள செலவினங்களுக்கான கணக்கிடை உள்ளடக்கியது.
தற்போது நடைமுறையில் 13 ஆண்டுகள் ஆகியும் அதே நிலை தொடர்ந்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை நிலையங்களின் சேமிப்பு கிடங்கில் குறைந்தபட்சம் பெட்ரோல் டீசல் சேமிக்க வலியுறுத்துகிறது. இந்நிலையில் பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்யும்போதே அனைத்து மத்திய மாநில அரசுகள் விதித்திடும் வரிகளை செலுத்திய பின்பே விற்பனை நிலையங்களுக்கு பொருட்கள் வந்து சேருகிறது.
இதன் அடிப்படையில் சில்லறை விற்பனை விலையினை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தானியங்கி உபகரணங்களின் மூலம் அறிவிப்பு செய்கின்றன.
கடந்த மே 21 அன்று இரவு மத்திய அரசினால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியின் எதிர் வினையாக தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாய் 12 காசுகளும், டீசல் ஒரு விட்டருக்கு 6 ரூபாய் 68 காசுகளும் சில்லறை விற்பனை நிலையங்களின் சில்லறை விற்பனை விலையினை குறைத்து நிர்ணயம் செய்து விற்பதற்கான அறிவிப்பினை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டனர். இதனால் அன்றைய தினம் எங்களது சேமிப்பு தொட்டிகளிலிருந்த அனைத்து கலால் மற்றும் விற்பனை வரி செலுத்திய சரக்குகளின் சில்லறை விற்பனை வரி குறைக்கப்பட்டதால் குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் அதிகபட்சம் லட்சம் 10 வரை விற்பனையாளர்கள் இழப்பினை சந்தித்துள்ளனர்.
இது விற்பனையாளர்களின் நடப்பு மூலதனத்தினை மிகவும் பாதித்துள்ளது. இது போன்ற விற்பனை விலை குறைப்பினை எண்ணெய்
நிறுவனங்கள் இரண்டாவது முறையாக அமல்படுத்தியுள்ளது.
ஆகவே, கடந்த நவம்பர் 4ம் தேதி மற்றும் மே 21ம் தேதிகளில் சில்லறை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பினை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையார்களுக்கு ஈடு செய்திட வேண்டும்.
இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தற்போழுது ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல். டீசல் கொள்முதல் செய்வதை அகில இந்திய அளவில் நிறுத்தம் செய்து உள்ளோம்
இதனால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பின்றி வழக்கமான முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை தொடர்ந்து விற்பனை நிலையங்களில்
நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.