த.வெ.க. சார்பில் இலவச இசேவை மையம் திறப்பு
திருச்சி, ஆக.13 த.வெ.க. சார்பில் சிந்தாமணி பகுதிக்குட்பட்ட 12வது வட்டம் தாஜ்மஹால் பின்புறம் ராமமூர்த்தி நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச இசேவை மையம் திருச்சி கிழக்கு தொகுதி தவெக பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் நாகநாதர் மகேந்திரன் சார்பில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சிந்தாமணி முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில் நாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்ட் மில்டன், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வரகனேரி கௌதமன்,பாலக்கரை பகுதி செயலாளர் பாலக்கரை ரா.சி.சூர்யா, ஏர்போர்ட் வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்குமார், பாலக்கரை கிழக்கு பகுதி செயலாளர் சிவா, காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதி செயலாளர் டர்க்கிஷ், மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ் குமார், சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகளும், கழக தோழர்களும், கழக தோழிகளும் திரளாக கலந்து கொண்டனர்.