சூடுபிடிக்க தொடங்கிய மர்மமான முறையில் இறந்த பெண் வழக்கு

0 451
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி இளஞ்சியம். இவர் கடந்த 3ம் தேதி அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுமட்டுமின்றி சம்பவ இடத்தில் போலீசார், மருத்துவக்குழு, தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட இளஞ்சியம் எப்படி இறந்தார்?, அவர் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இளஞ்சியம் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் சூழலில் போலீசார் வழக்கை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரின் ஒரு பிரிவான சைபர் செல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சில செல்போன்கள் மூலம் சில எண்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி சம்பவம் நிகழ்ந்த இடத்தில் எந்த எண்ணில் இருந்து பேசியுள்ளனர் என்பதை அறிய முடியும். அதன்படி வழக்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் முனைப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தின் வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.