திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

0 417
Stalin trichy visit

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(25). இவரது உறவினர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 10-ந் தேதி ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிட முன்புள்ள வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீதர் புகார் கொடுத்தார். அதன் பேரில், திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.