புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

0 347
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் புளியஞ்சோலை அமைந்துள்ளது.
சுற்றுலா தலமான புளியஞ்சோலை கொல்லிமலையின் அடிவாரப் பகுதியாகும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமான நிலையில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலையில் குவிந்தனர்.
மலை மேலிருந்து சிலிர் என சலசலத்து வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
கோடை
விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப்
பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து இயற்கை சூழலில் குளியல், சாப்பாடு என அமைதியாக பொழுதை கழித்தனர்.
புளியஞ்சோலைக்குள் மது எடுத்துச்சென்று அருந்துபவர்களை தடுக்கும் விதமாக வானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மிகுந்த பொருட்செலவு செய்யாமல் இயற்கையோடு
ஒரு நாள் இன்ப சுற்றுலா என குடும்பத்துடன் செல்ல விரும்புபவர்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் புளியஞ்
சோலையை தேர்வு செய்யலாம்.
சென்னை, திருச்சி, நாமக்கல், துறையூர், உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் இயற்கையைக் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.