140 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல் கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது மக்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கித் தந்த 140 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.