மணப்பாறை அருகே லாரி மோதி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு

0 330
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் பொத்தமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  கருப்பையா (வயது 49). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் இவர் பூசாரிப்பட்டியில் வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வரும்போது பொத்தமேட்டுப்பட்டி என்ற இடத்தில் அரியலூரில் இருந்த சிமெண்ட் ஏற்றிவந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த கருப்பையா மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.