சஞ்சீவிராயன் கோவில் அருகே கிடந்த பெண் பிணம்

0 501
Stalin trichy visit

முசிறி பரிசல்துறைரோடு பகுதியில் உள்ள சஞ்சீவிராயன் கோவில் அருகே சுமார் 60 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை கைப்பற்றி அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.