லாக்அப் மரணங்களை தடுக்க காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுரை

0 252
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15. லாக்அப் மரணங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவுகளை டிஜிபி .சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்கள். மேற்கண்ட உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், லாக்அப் மரணங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
எதிரிகளை கைது செய்யும்போது எதிரியின் உடல்நலம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும், எதிரிகளை விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணை செய்யவேண்டும் எனவும், சொத்து தொடர்பான வழக்குகளில் எதிரிகளை சரியான முறையில் விசாரணை செய்து களவு போன சொத்துக்களை மீட்கவேண்டும் எனவும், மேலும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்யக்கூடாது எனவும், மேலும் காவல் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் எனவும், காவல் நிலையங்களில் கைதிகள் மரணமோ, சித்ரவதைகளோ நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்அறிவுறுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.