திருச்சி மாநகரில் சாலைகளை சீரமைக்கவும், தெரு நாய்கள்,மாடுகளை கட்டுப்படுத்த கோரி மேயர், ஆணையரிடம் மனு

0 260
Stalin trichy visit

திருச்சி மாநகர பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்கள், மாடுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய கோரியும்,பழுதடைந்து உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க கோரியும்,
திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நேற்று மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பெறுப்பேற்ற வைத்தியநாதனுக்கு  மமக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
இந் நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது MC ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.