வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் மாயம்…
பள்ளிவிடையில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் மாயம்.காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடையில் வீட்டின் முன் நிறுத்தி இந்த பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். காவல் நிலையத்தில் புகார்.
பள்ளிவிடை குடி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் 46 வயதான கார்த்திவேல். இவர் கடந்த 16ம் தேதி இரவு வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பைக் மாயமாகியுள்ளது. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றனர் இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று அவர் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.