போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று (21.6.22) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, ராஜா காலனியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு இடையூறின்றி மின்கம்பங்களை மாற்றி அமைத்து, குடியிருப்புகளுக்கு மின் சேவை வழங்கிட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், மின்வாரிய தலைமைப் பொறியாளர் எஸ். செடியழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.