கொள்ளிடம் கதவணை திறப்பு விழா முன்னேற்பாட்டு பணி : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 262
Stalin trichy visit

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வருகின்ற 26 ஆம் தேதி தேதி திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ளதையொட்டி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே. என். நேரு அவர்கள் முக்கொம்பு மேலணையில் இன்று (21.6.22) நேரில் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட
வேண்டிய விழா முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ‌ப‌, வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ. சௌந்தரபாண்டியன், திரு.ந. தியாகராஜன், திரு.எம். பழனியாண்டி, நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைச்செல்வம், செயற்பொறியாளர்கள் கீதா, மணிமோகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.