திருச்சி மாவட்ட மருத்துவத்துறை சார்பாக சர்வதேச யோகா தின விழா
திருச்சிராப்பள்ளி மாவட்ட மருத்துவத்துறை சார்பாக சர்வதேச யோகா தின விழா 21.6.22 காலை 9.00 மணிக்கு அந்த நல்லூர் ஒன்றியம், திருப்பராய்த் துறை, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவரங்கம் கோட்டாட்சியர் மதிப்பு மிகு சிந்துஜா தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். கி.ஆ.பெ.மருத்துவ கல்லூரி டீன் நேரு , மா வட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர்லெட்சுமி கலந்து கொண்டனர்.
இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் கல்லூரி மாணவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருவரங்கம் வட்டாட்சியர்கள், அந்த நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்த நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.துரைராஜ் அவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அந்த நல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்ட அரசு சித்த மற்றும் இயற்கை மருத்துவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். மருத்துவர் பி ரித்தி புஷ்கரணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்