இல்லம் தேடிக் கல்வித்திட்டம் சார்பான கருத்தரங்கிற்கான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்…
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள இல்லம் தேடிக் கல்வித்திட்டம் சார்பான கருத்தரங்கிற்கான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்.
கல்லூரியின் சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் திருமதி .ரேவதிதலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் முனைவர் இரா .இராஜேந்திரன் த.ஆ .(ஒய்வு) கி.ஆ.பெ., மேல்நிலைப் பள்ளி, கா.மருதநாயகம் வட்டாரக் கல்வி அலுவலர் அந்தநல்லூர் ஒன்றியம், பெல்சிட்டா மேரி, என்.சித்ரா துறைத்தலைவர், இந்திரா ஸ்ரீவித்யா – இல்லம் தேடிக் கல்வித் திட்டவட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பயன்கள், வெற்றி, எதிர்கால முன்னெடுப்புகள் சார்ந்து கருத்தரங்கம் அமைய உள்ளது.