மணப்பாறை அதிமுக நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தலைவராக உள்ள சுதா பாஸ்கரன் நகராட்சி ஆணையர் சியாமலாவை சந்தித்து சற்றுமுன் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
மணப்பாறை நகராட்சிறில் நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் என்பவர் வெற்றிபெற்றார்.
நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணியில் 11 நகர்மன்ற உறுப்பினரும், அதிமுக கூட்டணியில் 11 நகர்மன்ற உறுப்பினரும், சுயேட்சையில் 5 நகர்மன்ற உறுப்பினர்களும் வெற்றிபெற்றிருந்த நிலையில் 53 ஆண்டுகளுக்கு பின் அதிமுக மணப்பாறை நகர் மன்றத்தை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் நகர்மன்றத் துணைத் தலைவர் காண தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும் சுயேச்சை கவுன்சிலர்களை பங்கேற்காததால் மூன்று முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் நிலை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது நகர்மன்றத் தலைவர் சுதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது ராஜினாமா செய்த சுதா தெரிவிக்கையில் தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறினார்.
இதேபோல் நகராட்சி ஆணையர் சியாமளா அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.