புள்ளம்பாடியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை பயிற்சி

0 284
Stalin trichy visit

புள்ளம்பாடியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்கள் இன்று நடத்தினார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள புள்ளம்பாடி கடைவீதியில் உள்ள தெப்பகுளத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சியை புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் இன்று நடத்தினார்.

2022ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக போலி ஒத்திகை பயிற்சியை புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபண்ணா தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார், தீயணைப்பு நிலைய போக்குவரத்து அமுதகுமார், வீரர்கள் ரமேஷ்குமார்,அசாருதீன் பழனிச்சாமி உள்ளிட்ட வீரர்கள் நடத்தினர். இதில் லைபாய், லைப் ஜாக்கெட், ரப்பர் படகு, தற்காலிக மிதவைகள் அந்தந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் இடி மின்னல் மின்சாரம் வெள்ள அபாய காலத்தில் பாதுகாப்பாக செயல்படுவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள்,பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். புள்ளம்பாடி பகுதி பொதுமக்கள், அரசு பள்ளி மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.