தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை பயிற்சி….

0 290
Stalin trichy visit

லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்கள் நடத்தினார். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சியை லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று நடத்தினார்.

2022ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சியை லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையில் நடத்தினர். இதில் லைபாய், லைப் ஜாக்கெட், ரப்பர் படகு, தற்காலிக மிதவைகள் அந்தந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் இடி மின்னல், மின்சாரம், வெள்ள அபாய காலத்தில் பாதுகாப்பாக செயல்படுவது,நீர் நீர் நிலைகளில் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் மீட்புப்பணிகள் எவ்வாறு கையாள்வது உள்ளிட்டவைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.