சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்…

0 318
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸதலமாகவும், இக்கோயிலிலுள்ள அம்மனை வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும், குடும்பம் செழிக்கும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று அமாவாசை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வணங்கிச் சென்றனர். இதில் சில பக்தர்கள் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.