சாலைகளை விரைவில் சீரமைக்குமாறு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்..

0 324
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக மேலபுலிவார்டு ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக கிடைப்பதோடு போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அளவுக்கு அதிகமான புழுதி பறந்து காற்று மாசுபாடு ஏற்படுவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் நேற்று இரவு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அலுவலகம் அப்பகுதியில் அமைந்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் சாலையை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக சாலைகளைப் போட வேண்டும் என்று கோரி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் சாலைகளை சீர் அமைத்து உடனடியாக புது சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.