ராக்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…
இராமகிருஷ்ண குடில், திருப்பராய்துறையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராக்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார். பேரறிஞர் அண்ணா பாராட்டை பெற்ற இராமகிருஷ்ண குடிலில் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து. 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிற இப்பள்ளி தன்னிறைவு பெற்ற பள்ளியாக இருப்பது சிறப்பு என கூறினார். இந்நிகழ்வில் ராமகிருஷ்ண குடியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
