தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் பிரபாகரனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத் துறைப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் மருத்துவர் பி. பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார் இன்று (1.7.22) வழங்கி வாழ்த்தினார்.