திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருச்சி, ஜூலை 5 திருச்சி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.31.26 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. வீட்டிலும் முக்கிய ஆவ ணங்கள் பறிமுதல் செய்ய யப்பட்டது.
திருச்சி நீதி மன்றம் அருகே பொதுப்பணித் துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங் குவதாக பல்வேறு புகார் கள் திருச்சி மாவட்டலஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென் றது. இதையடுத்து நேற்று மாலை டிஎஸ்பி மணிகண் டன் தலைமையில் காவல்துறையினர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத் தினர். அப்போது, ஊழி யர்கள் அனைவரையும் அலுவலகத்திற்குள்ளே இருக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை யில், உதவி பொறியாளர் கந்தசாமி அறையில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.31.26 லட்சத்தை பறி முதல் செய்தனர். இந்த பணம் ஒப்பந்ததாரர்கள் மூலம் பெறப்பட்டதா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தியதில், இந்த பணம் நடந்த பணிகளுக் காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிட வைத்துள்ளதாக தெரிவித்தாக கூறப்படுகி றது. தொடர்ந்து அலுவலக கணக்குகளை சரிபார்த்த னர்.
திருவானைக்காவலில் உள்ள கந்தசாமி வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக் கியதாக கூறப்படுகிறது. மேலும், திருச்சி பொதுப்ப ணித்துறை அலுவலகத் தில் செயல்படும், நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளரான மணிமோகன் என்பவரது வீடு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராஜா காலனியில் உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய அதி ரடி சோதனையில் ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.