அரசு பேருந்து மோதிய விபத்தில் பசுமாடு படுகாயம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பணமங்கலம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பசு மாடு மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பசுமாடு படுகாயம் அடைந்தது.

பள்ளிவிடையைச் சேர்ந்த பசுமாடு அங்குள்ள வயல் பகுதியில் மேய்ந்து விட்டு பணமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்தது. அப்போது சமயபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பசு மாடு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பசுமாடு எழுந்திரிக்க முடியாமல் சாலையிலையே கிடந்தது. இதனால் வாகன போக்குவரத்திற்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் சுங்கச்சாவடி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் கிரேன் உதவியுடன் பசுமாட்டை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.