பிச்சாண்டார்கோவிலில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு…

0 324
Stalin trichy visit

பிச்சாண்டார்கோவிலில் இன்று அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள தாமரைக் குளம் வயல் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை சடலமாக மீட்டனர்.

பிச்சாண்டார் கோயில் ஊராட்சி தாமரைக்குளம் வயல் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவரின் உடல் சடலமாக கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவத்துக்கு சென்ற கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் எதற்காக இங்கு வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.