பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

0 321
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி அருகில் இருந்து, தூய்மையான திருச்சி!பசுமையான திருச்சி!! ( Clean Trichy ! Green Trichy!!) என்பதை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இக்கல்லூரியின் மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,  இன்று (9.7.22) கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள்பையையும், துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.
ஆர்.வைத்திநாதன், இ.ஆ.ப., ஸ்கோப் நிறுவனத்தின் இயக்குநர் பத்ம ஸ்ரீ எம்.சுப்புராமன், பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.