மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவன்,மாமியார் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

0 489
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் மனைவியை கொலை செய்து பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வீட்டின் உள்ளே வைத்து வீட்டை பூட்டி விட்டு, தனது தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆந்திர மாநிலத்திற்கு தப்பியோடிய கணவர்,மாமியார் கொள்ளிடம் காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தனர்.

லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சி மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறியவர் 37 வயதான நரசிம்மராஜ். இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் பூர்வீகம் ஆந்திர மாநிலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருச்சி சமயபுரம் பகுதியில் குடியேறிய நரசிம்மராஜ் திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி யை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

நரசிம்மராஜ் டீக்கடை ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டினை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.பின்னர் தாளக்குடி ஊராட்சியில் உள்ள மீனாட்சி நகரில் நரசிம்மராஜ் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.இந்த பணத்தை நரசிம்மராஜ் வீணாக செலவு செய்த்தாகவும், அதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்தாகவும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ந்தேதி இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.இதில் ஆத்திரமடைந்த கணவர் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை அதிகாலையில் அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள நரசிம்மராஜ் அக்கா வீட்டிற்கு சென்று குழந்தைகளை விட்டு விட்டு தாயும்,மகனும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சிவரஞ்சனி போன் சுவிட் ஆப் வந்துள்ளது. இதனால் சந்தேக மடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்த்தால் சந்தேகமடைந்து வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்த போது, வீட்டின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் சிவரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொள்ளிடம் போலீசார் கொலை குறித்து விசாரணை செய்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் நரசிம்மராஜ் மற்றும் அவரது தாயார் நேற்று கொள்ளிடம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இது குறித்து அவர் போலீசார் விசாரணையில் கூறிய போது தனது மனைவி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரிடம் தவறான பழக்கம் ஏற்பட்டு நகை பணத்தை இழந்துள்ளார். நான் பலமுறை கண்டித்தும் கேட்காத நிலையில் ஆத்திரம் அடைந்து வெட்டி கொலை செய்துவிட்டு நானும் என் இரு மகள்களும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.பின்னர் நடந்த சம்பவத்தை தாயாரிடம் கூறிய போது அவர் எனக்கு புத்திமதி சொல்லி தற்கொலை எண்ணத்தை மாற்றியதாகவும்,பின்னர் அங்கிருந்து ஆந்திராவுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.