சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

0 295
Stalin trichy visit

திருச்சி ஆட்சியரிடம்  சாலை பயனீட்டாளர் நல அமைப்பு மாவட்ட தலைவர் பெ.அய்யாரப்பன்  அளித்துள்ள மனுவில்,

மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டங்களை மாதந்தோறும் முறையாக நடத்த
வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் நடைபெறும் விபரங்களை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிக்கை செய்திகளாகவும், திருச்சி மாவட்ட அரசு இணையத்திலும் வெளியிட வேண்டும்.

மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனை குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் கருத்துருக்கள்,
எடுக்கப்படும் தீர்மானங்கள் விபரங்களை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிக்கை செய்திகளாகவும், திருச்சி மாவட்ட அரசு இணையத்திலும் வெளியிட வேண்டும்.

மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மற்றும் கேஸ்/மின்
நுகர்வோர் கூட்டங்களில் அனைத்து தன்னார்வ அமைப்புகள் மற்றும் பயனீட்டாளர்கள் கலந்து
கொண்டு தங்களது குறைபாடுகளை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று
குறைபாடுகள் தீர்வு காணப்படுகின்றது.
அதே போல் சாலைப் பாதுகாப்பு ஆலோசனை குழுக் கூட்டங்களில் அனைத்து தன்னார்வ அமைப்புகள், பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு சாலைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான குறைகளை குழுவின் பார்வைக்கு கொண்டு செல்ல அனைவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.”

சாலைப்பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு விசயத்தில் சாலை பயனீட்டாளர்கள் நலன் கருதி மாவட்ட அளவில் சாலைகள் தொடர்பான குறைபாடுகளையும், விபத்து பகுதிகளையும், விபத்து மரணங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளவும், அது தொடர்பான குறைகளை சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் முன் வைக்கவும், தனி அலுவலரை நியமனம் செய்து – பதவியின் பெயர், அலுவலக முகவரியினை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்திகளாகவும், திருச்சி மாவட்ட அரசு இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.