லால்குடி பகுதியில் 1 1/2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

0 323
Stalin trichy visit

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் , பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஆர். டி. ஓ. வைத்தியநாதன் தலைமையில் தாசில்தார் சிஸிலினா சுகந்தி , லால்குடி நகராட்சி ஆணையர் குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமில் ஈடுபட்டனர். அப்போது லால்குடி பகுதியில் 1 1/2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 3, 300 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 96 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.