தீரன்நகர் கோரையாற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்..!

0 444
Stalin trichy visit

திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை நடமாட்டம் உள்ளது. இந்த முதலை சில நேரங்களில் கோரையாற்றின் கரைக்கு வந்து படுத்து ஓய்வெடுத்தும் செல்கிறது. இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோரையாற்றில் ஆகாய தாமரை படர்ந்து உள்ளதால் முதலை இங்கு வந்து தஞ்சமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் நடமாட்டம் தெரிந்தால் அது அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிடுகிறது. முதலையை பார்த்த அப்பகுதி மக்கள், அருகே உள்ள சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முதலை தண்ணீருக்குள் ஓடிவிட்டது. இது குறித்து மாநகர போலீசார் கூறுகையில், இந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவோ அல்லது வீட்டு விலங்கினங்களான ஆடு, மாடு ஆகியவற்றை மேய்ச்சலுக்கு விடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முதலை நீரில் அடித்து வரப்பட்டு இங்கு தஞ்சமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.