சமயபுரம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து. சமயபுரம் லால்குடி தீயணைப்பு வீரர்கள் போராடிய தீயை அனைத்தனர்.
சமயபுரம் அருகே
நம்பர் 94 கரியமாணிக்கம் சாலையில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சமயபுரம் மற்றும் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணை போர் மைக்கல் சூசை வீரர்கள் சதீஷ்குமார் திவாகர் மற்றும் லால்குடி தூயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து சுரேஷ் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் விஜய் ,சசிகுமார் உள்ளிட்டோர் இரண்டு தீயணப்பு வாகனங்கள் ஒரு ஜேசிபி இயந்திரம் இரண்டு தண்ணீர் லாரி கொண்டு சுமார் எட்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ மற்ற பகுதிகளுக்கு செல்லாதவாறு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.