குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கல்
அத்தானியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தானியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கினர்.
2022 குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு உரம் ஒரு ஏக்கருக்கு
45 கிலோ யூரியா
50 கிலோ டிஏபி
25 கிலோ பொட்டாஷ் ஆகியவை 100% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குறுவை மாற்று பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதை ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 70% மானியத்திலும் இதர பிரிவினர்களுக்கு 50% மானியத்திலும் 10 கிலோ DAP 100% மானியத்திலும் வழங்கப்படுகிறது. மேலும் அறுவடை கூலியாக ரூ.450/- வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஒரு நபருக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தின் நெல்-இயந்திரம் நடவு, வரிசை நடவு, மாற்று பயிர் சாகுபடிக்கு உளுந்து விதை விநியோகம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துணை இயக்குநர் திருமதி.மல்லிகா பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி, மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மற்றும் தத்தமங்கலம் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.