12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை

0 778
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் செந்தாமரைக்கண் பகுதியைச் சேர்ந்த மாணவன் கடந்த 12ம் வகுப்பு தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த்ததால் மனவிரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் செந்தாமரைக்கன் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் ராஜலட்சுமி தம்பதியினர்.இவருடைய மகன் 18 வயதான அருண்குமார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 15 வருடத்துக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் செந்தாமரைக்கன் பகுதியில் வாடகை வீட்டில் தனது தாயுடன் அருண்குமார் வசித்து வந்தார்.அரசு பள்ளியில் படித்த மாணவன் கடந்த வருடம் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.இதில் கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தில் தோல்வியுற்றார். இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது தாயார் கோவிலுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாணவன் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது தாயார் திரும்பி வந்து பார்த்தபோது அரை பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையை உடைத்து மாணவனை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.