ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிப்பு

0 356
Stalin trichy visit

 

திருச்சி பெரியமிளகுபாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனையொட்டிய அணுகு சாலையில் தினந்தோறும் பஸ், வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரியமிளகுபாறை, பொன்னகர், கோரிமேடு உள்ளிட்ட பகுதியில் இருந்து விரைவாக பஸ் நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை உள்ளது. மேலும், இந்த சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், பழனி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் செல்கிறது. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையில் இருந்து சற்று வெளியே தள்ளி கட்டப்பட்டுள்ளதால் அந்த பகுதி மட்டும் குறுகலாக உள்ளது. இதனால் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக வளைவில் திரும்ப முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் அங்கு அரங்கேறி வந்தது. இதனால் ஆரம்ப சுகாதாரநிலையத்தை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, நேற்று அங்குள்ள ஆரம்பசுகாதார நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.