துறையூரில் அப்துல் கலாம் நினைவு தின பேரணி

0 323
Stalin trichy visit

துறையூர் ஜுலை 28
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் உள்ள விமலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் .ஏ பி ஜே அப்துல் கலாமின் 7-வது நினைவு தினத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் விமலா பள்ளியில் அப்துல் கலாமின் புகைப்படக் கண்காட்சி மற்றும் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியின் போது அப்துல் கலாம் போல் வேடமணிந்து மாதிரி ஏவுகணை முன்பு நின்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது பின்னர் சுமார் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்துல்கலாமின் முகமூடியை அணிந்தவாறு மெளன அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணியில் பங்கேற்றனர் பள்ளி முதல்வர் மரியசெல்வி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார் அருட்சகோதரி மார்க்கரெட் மேரி முன்னிலை வகித்தார் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி துறையூர் மெயின் ரோடு வழியாக அணங பேருந்து நிலையம் சென்று அங்கு அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள்
மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் திருச்சி ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மேலும் அலுவலக பணியாளர்கள் அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.