பள்ளி மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 336
Stalin trichy visit

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார் கிளை நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில்
ஜுலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் போட்டிகள் நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
அவ்வகையில் திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சதுரங்க விளையாட்டினை அறிந்து கொள்ள வேண்டும்.
அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கு கருப்பு நிறங்களில் காய்கள் இருக்கும். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்டது. சதுர வடிவமானது பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் விளையாட்டுக்கு
மதியூகமும், தந்திரமும் முக்கியமானவையாகும்.செஸ் விளையாட்டு ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு “மூளை சார்ந்த போர்க்கலை”யாகவும் பார்க்கப்படுவதுண்டு. சதுரங்கத்தில்
ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும்.
தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும் எனக்கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.