நம்ம திருச்சி விவசாய சந்தை : கண்காட்சி

0 669
Stalin trichy visit

நம்ம திருச்சி விவசாய சந்தை “உழவு, உணவு, உயிர்”
திருச்சியில் 30.7.22 சனிக்கிழமை , மத்திய பேருந்து நிலையம் அருகில்

தண்ணீர் அமைப்பு, கிரியா அறக்கட்டளை , பசுமை சிகரம் அறக்கட்டளை, அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியோர் இணைந்து நடத்தும் “நம்ம திருச்சி விவசாய சந்தை” நிகழ்ச்சி வருகின்ற 30.07.22 சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ்நிவாசா ஹாலில் நடக்கிறது.

“உழவு, உணவு, உயிர்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளே இடை தரகர் இன்றி நேரடியாக வேளாண் பொருட்களை செய்கிறார்கள்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்

இந்த கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், கீரை விதைகள், செடி, கொடி விதைகள், பாரம்பரிய நெல் விதைகள், சிறுதானிய விதைகள், பயறு வகை விதைகள், மண்ணை வளப்படுத்தும் உர பயிர் விதைகள், பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய அவல் வகைகள், பாரம்பரிய மூலிகை பொடிகள், பாரம்பரிய சித்த மருத்துவ பொருட்கள், பாரம்பரிய கசாய பொடிகள் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொது மக்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து தங்களின் குடும்பத்திற்கு தேவையான ஆரோக்ய பொருட்களை வாங்கிச் செல்லலாம் .

நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவருக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் இலவச இயற்கை மருத்துவ மற்றும் சித்த மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது .

மேலும் 50 விவசாயிகளுக்கு குறிப்பிட்ட வகை பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது .

காலை 9 மணி அளவில் திருச்சி வேளாண்மை துறை இணை இயக்குனர் அக்ரி முருகேசன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று கண்காட்சியை துவங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார்.

வேளாண் வணிக துறை துணை இயக்குனர் ஆர் சரவணன் மற்றும் உழவர் பயிற்ச்சி மைய துணை இயக்குனர் ஆர் மோகன் , மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், கலை காவேரி நுண்கலை கல்லூரி பேராசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான கி. சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு ‘கிச்சனுக்கு லீவு விடுங்க’ என்ற தலைப்பில் தஞ்சை அன்னை மருத்துவ மையம் நிறுவனர், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் .மரு . கே. கலைமகள் ரவி பேசுகிறார் .

காலை 11 மணிக்கு திருச்சி துவாக்குடி இ.எஸ்.ஐ மருத்துவமனை சித்த மருத்துவர் மரு.திருமதி லட்சுமி கீதா ‘என்ன சாப்பிடணும்’ ‘எப்படி சாப்பிடணும்’ என்ற தலைப்பில் பேசுகிறார் .

மாலை 4 மணிக்கு திருச்சி ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மைய நிறுவனர் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் மரு. ஆர். சுகுமார் நோய் தீர்க்கும் உணவு முறைகள் குறித்து பேசுகிறார்.

திருச்சி மாநகரில் முதன் முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு வேளாண் பெருமக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.