திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ.1.2 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினர்
திருச்சி அரசு மருத்துமனையில் ரோட்டரி கிளப் சார்பாக ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் அரசியல்வாதிகள் சிலர் மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர். இது ஏற்புடையதல்ல எனவே இது தகவல் என்றாலும் மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே கேட்டறிய வேண்டும். இதை மீறும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதிமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு கே.என்.நேரு பதிலளிக்க மறுத்துவிட்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 673 உள்ளது. மீதமுள்ள சாதாரண படுக்கைகள் 366 ல் 88 சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளதாக கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, டீன் வனிதாமத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, அப்துல் சமத்,ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ரோட்டரி மாவட்ட கவர்னர் சொக்கலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…