துறையூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி : நாளை மின்விநியோகம் இருக்காது

0 414
Stalin trichy visit

துறையூர் கோட்டம் சிக்கத்தம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட முருகூரில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 24 மணி நேர மும்முணை மின்சாரம் வழங்க விஸ்தரிப்பு பணிகள் வருகின்ற 04.08.2022 அன்று மேற்கொள்ள இருப்பதால் துறையூர் 110/22-11கி.வோ துணைமின் நிலையத்தில் உள்ள 11கி.வோ முருகூர், 11கி.வோ பாலக்கரை , 11கி.வோ கீரம்பூர் மற்றும் 22கி.வோ கொல்லப்பட்டி உயரழுத்த மின் பாதைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே மேற்கண்ட உயரழுத்த மின் பாதைகளில் மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர் மதுராபுரி , குடில் ரோடு, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு, பாலக்கரை, கீரம்பூர், சொரத்தூர், சத்திய நாராயண சிட்டி , வெங்கடேசபுரம், சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கமுடையாண்பட்டி, சங்கம்பட்டி, காமாட்சிபுரம், சேனப்பநல்லூர், நாமநாயக்கண்பட்டி, V.A சமுத்திரம், எரகுடி, வடக்குபட்டி, வீரமச்சான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வருகின்ற 04.08.2022 வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் திரு.பொன்.ஆனந்தகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.