திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா

0 349
Stalin trichy visit

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்,கரூர் பைபாசில் உள்ள அய்யாளம்மன் படித்துரை மற்றும்  அண்ணா சிலையில் உள்ளிட்ட காவிரி படித்துரைகளில் ஆயிரக்கணக்கான புதுமன தம்பதியர்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி அதிகாலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர்.

இயற்கைக்கு,காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக பன்நெடுங்காலமாக தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி தேங்காய்,பழங்கள், மஞ்சள்,குங்குமம்,பச்சை அரிசி காதோலை கருகமணி, நாவல் பழம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை நதி தேவதைகளுக்கு படைப்பது வழக்கமான நிகழ்வு, அதேபோல் திருமணமான புதுமண தம்பதியர்கள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு காவிரி அணையை வணங்குவதோடு புதிய மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள்.

அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான சுமங்கலி பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஒன்று கூடி காவிரி தாயை வணங்கி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.