தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…!
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் ஸ்ரீரங்கராயபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி ஆல்பர்ட். (வயது 27). டிரைவரான இவரது மனைவி திவ்யா (24). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியது. இவர்களுக்கு மெர்வின்ஸ்ரீ (3½) என்ற மகள் உள்ளார். கடந்த 4-ந்தேதி திவ்யா வீட்டில் சமையல் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஆண்டனி ஆல்பர்ட் மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக 2 நாட்கள் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று ஆண்டனி ஆல்பர்ட் மனைவியிடம் பேசாமல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.