கொள்ளையர்களின் இடமாக மாறும் சத்திரம் பேருந்து நிலையம்…!

0 544
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அன்ன புஷ்பம் (வயது 65). இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 7 பவுன் தங்கச் செயின் ஒன்றை எடுத்து வந்தார். சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கைப்பையை நகையுடன் திருடி சென்று விட்டனர். இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகையை லாவகமாக கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

இதேபோல், திருச்சி பீமா நகர் விவேகானந்தா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (57). இவர் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது மர்ம ஆசாமி ஒருவன் அவர் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றார். இது குறித்து ஜானகி கோட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.