விரகாலூரில் பெரிய ஏரியை சீரமைக்கும் பணிகள் தீவிரம்.

0 167
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 104 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.1.2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியஏரியின் தென்கரையை பொதுப்பணித்துறையினர் பலப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் தூர்வாரி குழாய் பதிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஏரியிலிருந்து சுமார் 600 ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இந்த ஏரியில் 20 சதவீதம் தண்ணீரை மட்டுமே சேமிக்க வைக்க முடிகிறது. மீதி உள்ள 80 சதவீத பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது. இந்த 20 சதவீத நீர் ஆதாரத்தை வைத்துதான் சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உள்ளது இந்த 20 சதவீத தண்ணீர் வைத்து சம்பா சாகுபடிக்கே நீர் தட்டுப்பாடு ஆகிறது. கடைமடைக்குக் கூட போதிய தண்ணீர் சென்றடைவதில்லை. இந்த பகுதி விவசாய நிலங்களுக்கு பெரியஏரிதான் நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 80 சத இடத்தில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற்றியும், பலப்படுத்திய தென்கரையில் செம்மண் கிராவல் அடித்து சாலையாக செப்பணித்து தருமாரும் படி பொதுப்பணித் துறைக்கும்,மாவட்ட நிர்வாகத்திற்க்கும் விரகாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சூசைஅந்தோனி கோரிக்கை வைத்துள்ளார்.ஏரியில் 80 சதவீத பகுதியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வாரினால் இருபோக விவசாயம் செய்யலாம் என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.