திருச்சி புறநகர் பகுதியில் நாளை மின்சாரம் இருக்காது

0 413
Stalin trichy visit

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அளுந்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து சேதுராப்பட்டி மற்றும் பாத்திமாநகர் செல்லும் மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுராப்பட்டி, பாத்திமாநகர், எரகுடி. கும்பக்குறிச்சி, ஓடக்குறிச்சிப்பட்டி, சரளப்பட்டி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி. மேலப்பச்சக்குடி, இ.மேட்டுப்பட்டி, இராசநாயக்கன்பட்டி, பூதக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.